search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதிநிறுவன அதிபர் கடத்தல்"

    மேற்கு மாம்பலத்தை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் கடத்தப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
    போரூர்:

    மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் மோகன் பைனான்சியர். இவர் வடபழனி பிள்ளையார் கோவில் தெருவில் நிதி நிறுவன அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் சரவணகுமார் என்பவர் மோகனுக்கு அறிமுகமானார்.

    இதைதொடர்ந்து கடந்த 23-ந்தேதி மோகனையும் அவரது உறவினரையும் மகாபலிபுரத்தில் உள்ள மருந்து நிறுவனத்திற்கு பைனான்ஸ் கொடுப்பது தொடர்பாக சரவணகுமார் காரில் அழைத்து சென்றார். திடீரென அவர் சேலையூரை அடுத்த மப்பேடு பகுதிக்கு காரை ஓட்டிச் சென்றார்.

    அங்கு மறைந்து இருந்த 3 பேர் கொண்ட கும்பல் மோகனையும், அவரது உறவினரையும் கட்டிப் போட்டு ரூ.1 கோடி கேட்டு மிரட்டினர்.

    இதனை அறிந்த மோகனின் சகோதரர் ரூ.33 லட்சம் கொடுத்து மோகனையும், உறவினரையும் மீட்டார். அப்போது 28 பவுன் நகையையும் கடத்தல் கும்பல் பறித்துக் கொண்டனர். இதுபற்றி வடபழனி போலீ சில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடத்தல் தொடர்பாக எம்.எம்.டி.ஏ. காலனி பாடசாலை தெருவை சேர்ந்த ஷேக், சூளைமேடு நந்த குமார், மதுரவாயல் சீனிவாசன், சுதிர்குமார், செல்லபாண்டி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ. 3 ½ லட்சம், கார், 2 மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் சரவண குமார் என்ற பெயரில் போலியாக வாலிபர் மோகனிடம் அறிமுகமாகி இருப்பது தெரிந்தது. அவரையும் கூட்டாளிகளான மேலும் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். #Tamilnews
    ×